“லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில், இரவில் இளம்பெண் ஒருவரை 5 பைக்குகளில் விரட்டி சென்ற ஒரு கும்பல் பின்னர் அவரை வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பல்ராம்பூர் மாவட்டத்தில் கொத்வாலி திஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் ஒருவர், தன்னுடைய மாமா வீட்டுக்கு சென்று விட்டு, கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் வீட்டுக்கு செல்கிறேன் என கூறி விட்டு சென்றுள்ளார்.

ஆனால், வழியில் லிப்ட் தருகிறோம் என கூறி, அவரை 5 முதல் 6 பைக்குகளில் கும்பல் ஒன்று தெருவில் துரத்தியுள்ளது.

அந்த கும்பலுக்கு பயந்து அந்த இளம்பெண் தெருவில் ஓடியுள்ளார். இந்த காட்சிகள் பல்ராம்பூர் மாவட்ட எஸ்.பி.யின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளன.

இதன்பின்னர், அந்த கும்பல் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீஸ் உயரதிகாரி கூறும்போது,

இந்த சம்பவத்தில் அங்கூர் வர்மா மற்றும் ஹர்ஷித் பாண்டே ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார். தெருவில் இளம்பெண் ஒருவரை பைக்கில் துரத்தி சென்று, வயலில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version