குவைத்தில் விஷ சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவைத்தில் இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அங்கு விஷ சாராயம் குடித்த 63 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட 63 பேரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 13 பேர் பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version