யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (24) உயிரிழந்துள்ளார்.

 

கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் பிரணவன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

 

குறித்த இளைஞன் வீட்டின் கூரை சரிபார்ப்பதற்காக கூரையின் மேல் ஏறியுள்ளார். இதன்போது கூரை உடைந்து கீழே விழுந்த நிலையில் மயக்கமுற்றுள்ளார்.

 

பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version