இந்நிலையில் புலிகள் தனித்து விடப் பட்டனர்.
ஏனைய இயக்கங்களினால் தமக்கு அச்சுறுத்தல்கள் வரும் எனக் கருதி தாயகத்தில் புலிகள் இயக்கம் ஆயுதத் தாக்குதலை நடாத்தி ரெலோ இயக்கத்தை தடைசெய்தது. தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் இனையும் தடைசெய் தது. புளொட் இயக்கம் தானாக ஒதுங்கிக் கொண்டது.
ஈரோஸ் இயக்கத்தின் பெரும்பகுதி புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட சம்மதித்தது. ஏனையவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
விடுதலைப் போராட்டத்தை நடாத்தும் பொறுப்பை புலிகள் இயக்கம் தனித்து கையிலெடுத்தது.
இந்தச் சூழ்நிலை இந்திய அரசிற்கு மிகப் பெரும் தலைவலியாகியது.
எல்லா விடயங்களையும் புலிகளுடன் மட்டும் கையாள வேண்டியிருந்தது. புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பது இலகுவானதாக இருக்கவில்லை.
அவர்களைப் பணிய வைக்காமல் அடங்குவதற்கு தயாராக இருந்த சிறீலங்கா அரசினைக் கையாள முடியவில்லை.
இந்நிலையில் 1986 நவம்பரில் பெங்களூரில் சார்க் உச்சிமாநாட்டின் போது புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், சிறீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெய வர்த்தனாவிற்குமிடையில் பேச்சு வார்த்தை ஒன்றை நடாத்த இந்திய அரசு முயற்சித்தது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தீர்வுத்திட்டம் ஒன்றினை முன்வைக்க இதன் போது நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இந்தியாவின் முயற்சி தோல்வியடைந்தது. பெங்களூருக்கு பிரபாகரனை அழைத்துச் சென்ற போதும் இந்திய முயற்சி கைகூடவில்லை.
புலிகள் மீதான இந்தியாவின் கோபம் உச்சத்திற்கு சென்றது. புலிகளைப் பணியவைப்பதற்காக அவர்களின் தொலைத் தொடர்புக் கருவிகள் அனைத்தையும் பறித்தது. இதனை எதிர்த்து பிரபாகரன் சாகும்வரை உண் ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி னார்.
(வீரமணி அவர்கள்தான் மென்பானம் கொடுத்து அவ்வுண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். நிறைவு செய்தபின் பிரபாகரனோடு வீரமணி அவர்கள் அளவளாவும் காட்சி.)
தமிழகம் கொந்தளித்தது. இறுதி யில் தொலைத் தொடர்புக் கருவிகளை பிரபாகரனின் காலடியில் வைத்த பின்னரே பிரபாகரன் உண்ணாவிர தத்தை நிறுத்தினார்.
இதன்பின்னர் இந்தியாவில் தங்கி நிற்பது போராட்டத்திற்கு இடைஞ்சலைக் கொடுக்கும் எனக் கருதி பிரபாகரன் தாயகம் திரும்பினார்.
இது புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியாவின் செயல்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தது.
மறுபக்கத்தில் இந்தச் சூழலைப் பயன்படுத்தி புலிகள் இயக்கத்தை அழிக்கும் வகையில் சிறீலங்கா அரசு ஒப்பிறேசன் லிபறேசன் என்ற பெயரில் வடமராட்சியில் தாக்குதலை நடாத்தியது. தன்னுடைய பிடி நழுவிப் போகும் என்பதற்காக இந்தியா இத்தாக் குதலை விரும்பவில்லை.
சிறீலங்கா அரசினைப் பணிய வைப்பதற்காக உணவு இராஜதந் திரத்தை இந்தியா கையிலெடுத்தது.
உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் வடபகுதிக்கு அனுப்ப முயற்சிக்க சிறீலங்கா கடற் படை கடலில் தடுத்தது.
இந்தியா விமானம் மூலம் உணவுப் பொட்டலங் களை யாழ்ப்பாணத்தில் போட்டது. இதன் மூலம் தெளிவான சைகை சி றீலங்கா அரசிற்கு காட்டப்பட்டது. படையெடுப்பை சந்திக்க வேண்டி வரும் என்பதே அச்சைகை. ஜே.ஆர் உடனடியாகவே பணிந்தார்.
இப்பணிவைப் பயன்படுத்தி விடு தலை இயக்கங்களை விடுத்து தானே சிறீலங்கா அரசுடன் ஒப்பந்தம் செய்ய இந்திய அரசு தயாரானது.
எப்படியாவது ஒப்பந்தம் செய்து இந்திய நலன்களுக்கு எதிரான சக்திகளை இலங்கையிலிருந்து கலைப்பதே நோக்கம்.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரைபு தயாரிக்கப் பட்டது. இதற்கு புலிகளை சம்மதிக்க வைப்பது தான் இந்தியாவிற்கு இருந்த மிகப் பெரிய சவால்.
அங்கு அசோக் விடுதியில் பிரபாக ரனும் அவரது குழுவினரும் சிறைவைக்கப்பட்டனர். அவரது வெளித்தொடர்பு உட்பட தொலைபேசி த் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் டிக்சி ற் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற் கான நகலை பிரபாகரன் முன்வைத்தார்.
ஒப்பந்த நகல் ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை சிபார்சு செய்தது. வட-கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்படவில்லை.
மாகாண சபையின் அதிகாரங்கள் செயற்பாடுகள் பற்றி தெளிவாக வரையறுக் கப்பட்டிருக்கவில்லை.
ஆயுதக்களைவு ஏற்பாடுகள் ஏற்றதாக இருக்கவில்லை. இதனால் தமிழ் மக்களின் அபிலாசைகளை. தீர்க்க முடியாத இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது எனப் பிரபாகரன் கூறினார்.
ஏற்காவிட்டால் உங்களை இங்கு தடுப்புக்காவலில் வைப்போம் என டிக்சிற் மிரட்டினார். விரும்பினால் தடுப்புக்காவலில் வையுங்கள் நாங்கள் ஏற்க மாட்டோம் எனக் கூறினார் பிரபாகரன்.
கோபம் கொந்தளிக்க டிக்சிற் தனது சுங்கானை பிரபாகரனுக்கு காட்டியவாறு இந்தச் சுங்கானை நான் பற்றவைத்து புகைத்து முடிப்பதற்குள் இந்தியப் படைகள் உங்கள் படைகளை துவம்சம் செய்து விடும் என்றார்.
பிரபாகரன் ஏளனச் சிரிப்புடன் முடிந்ததைச் செய்து பாருங்கள் என்றார். கொதிப்படைந்த டிக்சிற் மிஸ்டர் பிரபாகரன் இத்துடன் நான்காவது தடவையாக இந்தியாவை ஏமாற்றியுள்ளீர்கள் என்றார்.
அதற்கு பிரபாகரன் அப்படியானால் நான்கு தடவைகள் இந்தியாவிடமிருந்து எமது மக்களை காப்பாற்றியிருக்கிறேன் என்றார்.
பிரபாகரன். டிக்சிற் ஆத்திரத்துடன் எழுந்து வெளியே சென்று விட்டார்.
இந்தியப்படைகள் அவமானத்துடன் இலங்கையை விட்டு வெளியேறிய போது கவிஞர் காசிஆனந்தன் டிக்சிற் சுங்கானில் இன்னமும் புகைத்து முடிக்கவில்லை என நக்கலாக கூறியிருந்தார்.
பிரபாகரனை மிரட்டிப் பணிய வைக்க முடியாது என அறிந்த இந்திய வெளிவிவகார அதிகாரிகள் எம்.கே.நாராயணன், சகாதேவ் பூரி போன்றவர்கள் மென் மையான முறையைக் கையாளமுயற்சி த்தனர். அதற்கும் பிரபாகரன் இடம் கொடுக்கவில்லை.
பிரபாகரன் மிக விரிவாக ஒப்பந்த குறைபாடுகளை எம்.ஜி.ஆருக்கு விளக்கினார். எம்.ஜி.ஆர் அதனை ஏற்றுக் கொண்டு உங்கள் நிலைப்பாட் டில் நீங்கள் உறுதியாக இருங்கள் நான் உங்களோடு இருப்பேன் எனக் கூறிவிட் டுச் சென்றார்.
ராஜீவிடம் ஒப்பந்தக் குறைபாடுகளை விபரமாக முன்வைக்கும் படி பாலசிங்கத்தை வேண்டினார் பிரபாகரன்.
இது பற்றிபாலசிங்கம் பின்வருமாறு கூறுகின் றார். முதலில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புப் பற்றி மிகச் சுருக்கமான கண்டன ஆய்வை முன்வைத்தேன்.
மிகவும் இறுக்கமான, நெகிழ்த்த முடியாத விதிகளைக் கொண்ட அரசியல் யாப்பு பெரும்பான்மையினரின் நலன்களைப் பேணும் வகையில் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அரசியல் யாப்பின் கீழ், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் மத்தியில் அர்த்தபூர்வமான முறை யில் அதிகாரப்பகிர்வு செய்வது இயலாத காரியம் என விளக்கி னேன்.
பரந்த நிறைவேற்று அதிகாரங் களையுமுடைய ஜனாதிபதியை அரச அதிபராகக் கொண்ட ஒரு இறுக்கமான ஒற்றையாட்சி அரசை சிறீலங்காவில் அரசியல் யாப்பு உருவாக்கம் செய் துள்ளது.
இந்த அரசியலமைப்பில் அரச நிர்வாக அதிகாரங்கள் அனைத்துமே மத்தியில் குவிக்கப்பட்டிருக்கின்றன.
இப்படியான ஒற்றையாட்சி யாப்பை இந்திய – இலங்கை ஒப்பந்தம் நிபந்தனை யின்றி முழுமையாகக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, நியாய பூர்வமாக அதிகாரப் பகிர்வு செய்யும் வகையில் அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றம் செய்வது சாத்தியமற்றது எனச் சுட்டிக் காட்டினேன்.
(தொடரும்…)
அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்