விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட் டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 49 ஆவது தேசிய விளையாட்டு விழா காலி தடெல்ல மைதானத் தில் கடந்த வார இறுதியில் நிறைவடைந்தது.
விளையாட்டு விழாவில் மிகவும் முக்கியமானதும் கடைசியுமான மெய்வல்லு நர் போட்டிகளில் வடக்கு, மலையக, கிழக்கு வீர, வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று அசத்தியிருந்தனர்.
கோலூன்றிப் பாய்தலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரனும் நேசராசா டக்சிதாவும் தமது முன்னைய சொந்த சாதனைகளை முறியடித்து புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதங்கங்களை சுவீகரித்தனர்.
மெய்வல்லுநர் போட்டி களில் இந்த இருவர் மாத்திரமே புதிய சாதனைகளை நிலைநாட்டினர். ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் 5.12 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையைப் படைத்தார்.
கடந்த வருடம் தன்னால் நிலைநாட்டப் பட்ட 5.11 மீற்றர் என்ற சாதனையை முறியடித்தே புவிதரன் இம்முறை புதிய சாதனையைப் படைத்தார்.
பெண்களுக்கான கோலூன் றிப் பாய்தலில் டக்சிதா 3.52 மீற்றர் உயரம் தாவி, 2024 இல் நிலைநாட்டப் பட்ட 3.51 மீற்றர் என்ற தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்தார்.
ஆண்களுக்கான தட்டு எறிதல் (48.08 மீற்றர்), குண்டு எறிதல் (15.40 மீற் றர்) ஆகிய இரண்டு நிகழ்ச்சி களிலும் வெற்றியீட்டிய எஸ்.மிதுன்ராஜ் 2 தங்கப் பதக்கங் களை வட மாகாணத்திற்கு பெற்றுக்கொடுத்தார்.
வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான இளங்கோ விகிர்தன் ஒரு தங்கப்பதக் கத்தையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தார்.
ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 31 நிமிடங்கள், 36.02 செக்கன்களில் நிறைவுசெய்த விகிர்தன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அதற்கு முன்னர் ஆண் களுக்கான 5000 மீற் றர் ஓட்டப் போட்டியில் (15:02.45) வெள்ளிப் பதக்கத்தை விகிர்தன் வென் றிருந்தார்.
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி (3.10 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்