மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசாங்கம் வழங்கிய வீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளமை அரசியல் மட்டத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை நேற்று அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ள மகிந்த, தங்காலையில் உள்ள தனது கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

எனினும் மகிந்த ராஜபக்ச மீண்டும் கொழும்பில் குடியேற 2 ஆடம்பர வீடுகளை வழங்க நேற்று 2 தொழிலதிபர்கள் முன்வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய, ஜெர்மனியில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவர் ராஜகிரிய பகுதியிலுள்ள தனது ஆடம்பர வீட்டை மகிந்தவுக்காக வழங்க முன்வந்துள்ளார்.

அதேவேளை பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஜெயந்தி மாவத்தையில் ஒரு ஆடம்பர வீட்டை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க மற்றுமொரு தொழிலதிபர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை கொழும்பில் ஆடம்பர வீடொன்றை வழங்க சீனா முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேற்றையதினம் மகிந்தவை சந்தித்த சீனத் தூதுவர் தேவையான அனைத்து விடயங்களை செய்து தருவதாக உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version