இலங்கையில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக இன்று (12) அடிக்கல் நாட்டப்பட்டது.

நகுலாம்பிகாதேவி சமேத நகுலேச்சரப் பெருமானின் 41 அடி உயரம் கொண்ட பூசாந்திர சித்திரத் தேருக்கான புதிய தேர் இருப்பிடத்தின் கட்டுமான வேலைகளுக்காகவே இன்று காலை 9.30 மணிமுதல் 10 மணிவரை உள்ள சுபமுகூர்த்ததில் இவ்வாறு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதன்போது ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்ற நிலையில் பகதர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version