அம்பாறை – காரைத்தீவு காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் ஒருவர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவமொன்று தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக சாய்ந்தமருதைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாவினை கையூட்டலாக பெற்றமை தொடர்பில் குறித்த கான்ஸ்டபிள் கைதாகியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று மாலை காரைத்தீவு காவல்நிலையத்தில் வைத்து சந்தேகநபரான காவல்துறை கான்ஸ்டபிள் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரை இன்றைய தினம் சாய்ந்தமருது நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version