மன்னார் – சிறுத்தோப்பு கடற்கரைக்கு அருகில் இந்த வாரம் 91 பறவைகளை கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் பேசாலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றும் 52 வயதுடையவர்கள் ஆவர்.

கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 72 புறாக்கள் மற்றும் 19 வேட்டை கோழிகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடத்தல் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பறவைகள் மற்றும்  படகுடன்  சந்தேகநபர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version