தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான 2025 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கான விண்ணப்ப படிவம் 2025.09.15 முதல் 2025.09.17 நள்ளிரவு வரை நிகழ்நிலை முறையில் வெளியிடப்பட உள்ளன.

பரீட்சைக்குத் தேவையான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான பதிவை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.slbfe.lk மூலம் மேற்கொள்ளலாம்.

இதற்காக 18 முதல் 39 வயதுக்குள் உள்ளவர்கள் (1985.09.15 முதல் 2007.09.14 வரை பிறந்தவர்கள்) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நிறக் குறைபாடு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். மேலும், நீதிமன்ற வழக்கில் குற்றவாளியாகி அபராதம் செலுத்தியவராக, சிறைத்தண்டனை அனுபவித்தவராக அல்லது கடுமையான குற்றங்களில் குற்றவாளியாக இருக்கக் கூடாது. அதே போல, நிறக் குறைபாடு, முதுகுத் தண்டு கோளாறுகள், விரல்கள் குறைவாகவோ அகற்றப்பட்டவையாகவோ இல்லாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தென் கொரியாவால் முன்பு நாடு கடத்தப்பட்ட வரலாறு இல்லாதவர்களும், ஈ-9 மற்றும் ஈ-10 விசா வகைகளின் கீழ் உட்பட மொத்தம் 5 ஆண்டுகளை மீறி தென் கொரியாவில் பணியாற்றாதவர்களும் தகுதி பெறுவர்.

பரீட்சை அனுமதிப்பத்திரத்தை பெற விண்ணப்பிக்கும் நபர்கள், குறைந்தபட்சம் மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஒன்றின் ஸ்கேன் பிரதியையும் கடந்த 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட 3.5 செ.மி × 4.5 செ.மி அளவுடைய வெள்ளை பின்னணியுடன் கூடிய புகைப்படத்தின் ஸ்கேன் பிரதியையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணம் ரூபா. 8,428.40 ஆகும். இதற்கான கட்டணம் இலங்கை வங்கி, மக்கள் வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கிக்கு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும். (கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண்கள் www.slbfe.lk இல் குறிப்பிடப்பட்டுள்ளன.)

இந்த பரீட்சை மற்றும் பரீட்சை அனுமதிப்பத்திரம் விநியோகம்  தொடர்பான மேலதிக தகவல்கள் பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளம் www.slbfe.lk மூலம் பெறலாம் என  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version