பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையில் 50 – 55 கி.மீ வரை அதிகரிக்கக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படக்கூடும். அதேநேரம் புத்தளம் முதல் கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையில் மணிக்கு 50-55 கி.மீ வேகத்தில் அதிகரிக்கும் என்றும், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள ““Advisory”” பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 55-65 கி.மீ. வரை அதிகரிக்க கூடும் என்பதுடன் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும் எனவே மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் எச்சரிக்கையாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version