“கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் அவர் 5 நிமிட வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய விஜய், “கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்கல, ஆனா கரூர்ல மட்டும் ஏன் இப்படி நடக்குது… எப்படி? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்.
மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்காங்க.கரூரை சேர்ந்த மக்கள் எல்லாம் இந்த உண்மையை வெளியே சொல்லும்போது… எனக்கு கடவுளே நேரில் வந்து சொன்னது போல தோணுச்சு. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்\” என்று தெரிவித்தார்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த உடனே சென்னை கிளம்பியது ஏன்? குறித்து விஜய் விளக்கம்
அதில் அவர் பேசியிருப்பதாவது:-என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட வலி மிகுந்த பிரச்சனையை நான் எதிர்கொண்டதே கிடையாது. மனசு முழுக்க வலி… வலி மட்டும்தான்.
இந்த சுற்றுப்பயணத்துல மக்கள் என்னை பார்க்க வராங்க. அதுக்கு ஒரே ஒரு காரணம்தான். அவங்க என்மேல வைச்சிருக்கிற அன்பும் பாசமும்… அந்த அன்புக்கும் பாசத்துக்கும் நான் எப்பவுமே கடமை பட்டிருக்கேன்.
அதனாலதான் இந்த சுற்றுப்பயணத்துல மத்த எல்லா விஷயத்தையும் தாண்டி மக்களோட பாதுகாப்புல எந்த சமரசமும் செய்யக்கூடாதுனு மனசுல ரொம்ப ஆழமா எண்ணம் இருந்தது.
இந்த அரசியல் காரணங்கள் எல்லாத்தையும் தவிர்த்துட்டு, ஒதுக்கி வைச்சிட்டு… மக்களோட பாதுகாப்பை மட்டும் மனசுல வைச்சிகிட்டு அதுக்கான இடங்களை தேர்வு செய்றது… அனுமதி வாங்குவது… ஆனா நடக்க கூடாதது நடந்துருச்சு…நானும் மனுஷன் தானே… அந்த நேரத்துல அத்தனை பேரு பாதிக்கப்ட்டுட்டு இருக்கும்போது… எப்படி அந்த ஊரை விட்டு என்னால கிளம்பி வரமுடியும்
.நா திரும்பி போகணும்னு (கரூருக்கு) இருந்தா… அதை காரணம் காட்டி அங்க வேற ஏதாவது அசம்பாவிதங்கள் நடத்துற கூடாதுனுதான் அதை நான் தவிர்த்து விட்டேன்.
இந்த நேரத்துல சொந்தங்களை இழந்து தவிக்கிற அத்தனை குடும்பங்களுக்கும் என்னோட ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு தெரியும். இதுக்கு என்ன சொன்னாலும் ஈடே ஆகாதுன்னு… மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவிலேயே குணமாகி வரணும்னு நான் வேண்டுகிறேன்.
கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் நான் சந்திக்கிறேன்.இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.”,