இந்த உச்சி மாநாடு அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் புதுடில்லியில் நடைபெற உள்ளது.
2025 – உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க சில நாடுகளின் தலைவர்கள் NDTV உலக உச்சி மாநாட்டில் உலகளாவிய உரையாடலில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையைச் சேர்ந்த ஹரிணி அமரசூரியா மற்றும் இரண்டு முன்னாள் பிரதமர்கள், ஐக்கிய இராச்சியத்தின் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலியாவின் டோனி அபோட் ஆகியோர் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.