ஜெர்மனி வான்வெளியில் அத்துமீறும் ட்ரோன்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விமான நிலையங்கள், முக்கிய அரசு கட்டிடங்கள், மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்ற உயர்மட்டப் பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ட்ரோன்களை (Drones) இனி நேரடியாகச் சுட்டு வீழ்த்த ஜெர்மனி காவல்துறைக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக, அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் அத்துமீறிப் பறந்து, பாதுகாப்புப் படையினருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த ட்ரோன்கள் உளவு பார்ப்பது, தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்துவது, அபாயகரமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுவரை, அத்துமீறும் ட்ரோன்களை எதிர்கொள்வதில் சட்டச் சிக்கல்கள் இருந்தன. ஆனால், இப்போது ஜெர்மனி அரசு, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த  முடிவை எடுத்துள்ளது.

ஜெர்மனியின் கூட்டாட்சி உள்துறை அமைச்சகம் (Federal Interior Ministry) இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, வானில் சந்தேகத்திற்கிடமான முறையில் பறக்கும் அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ட்ரோன்களைக் கண்டால், காவல்துறை உடனடியாக அவற்றைத் தடுக்க அல்லது அழித்துவிட (Shoot Down) உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம், ஜெர்மனியில் உள்ள உள்ளூர் போலீஸ் படைகள் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைப்புகள் என அனைவருக்கும் பொருந்தும் எனவும் கூறப்படுகின்றது.

இந்த அதிரடி அறிவிப்பு, தங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நடவடிக்கைகளில் ஜெர்மனி எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version