சூப்பர் டீலக்ஸ் அந்தஸ்து என்பது தற்காலிகமான சொகுசுதான். பரமபத பாம்பு மாதிரி நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டு அதிகமாக ஆடாமல் அடக்கி வாசித்தல் அவர்களுக்கு நல்லது.

அன்பு என்கிற சமாச்சாரம், அனைத்து பிக் பாஸ் சீசன்களிலும் படாத பாடுபடுகிறது. ‘என்னோடது மட்டுமே அக்மார்க் அன்பு’ என்று உரத்த குரலில் முழங்கிய நந்தினி, டென்ஷன் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

ஒருவர் பிக் பாஸில் கலந்து கொள்வதற்கு முன் அவர்களுக்கு ஐக்யூ முதற்கொண்டு பல்வேறு தகுதி சார்ந்த சோதனைகள் நடத்தப்படுவதாக சொல்கிறார்கள்.

எனில் நந்தினி போன்ற படு எமோஷனலான நபரை உள்ளே அனுமதித்து விட்டு அவர்கள் மனஅழுத்தத்தில் படாத பாடுபடுவதையும் காட்டி அவர்களை காட்சிப் பொருளாக்கும் வணிகத்தை பிக் பாஸ் தொடர்ந்து செய்கிறதா என்பது பெரிய கேள்வி.

போலவே கலந்து கொள்பவர்களும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி சரியாக அறிந்து கொண்டுதான் வருகிறார்களா என்பதும் இன்னொரு கேள்வி.

எப்படியோ தனக்கு கிடைத்த வாய்ப்பை நந்தினி உணர்ச்சிவசப்பட்டு உதறி எறிந்து விட்டார் என்று தோன்றுகிறது. விசாரணை நாளில் இதற்கான விடை கிடைக்கலாம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 5

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 | 010-10-2025 Vijay Tv Show- Day 05

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 | 09-10-2025 Vijay Tv Show- Day 04

Share.
Leave A Reply

Exit mobile version