கேகாலை மாவட்டம் புலத்கொஹுபிட்டிய எதுராபொல ஐந்து ஏக்கர் கீழ் பிரிவு தோட்டதில் 73 வயது தாத்தா 23 வயது இளைஞனை கொலை செய்துள்ளார்.

73 வயதுடைய தாத்தா குடும்ப தகராறு காரணமாக நெருங்கிய உறவினரான 23 வயது பேரன் திலானை கூர்ந்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

uயிரிழந்த  இளைஞன்  நேற்று முன்தினம் ஹட்டனில் நடந்த கவணயீர்ப்பு போராட்டத்தில் மலையக மக்களுக்காக குரல் கொடுத்தவர்  என கூறப்படுகின்றது.

இந்நிலையில்  பேரனை தாத்தா கொலை செய்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version