‘உன் தந்தையை நான் தான் கொன்றேன்’.. அம்பலாங்கொடை படுகொலையில் திடீர் திருப்பம்!

நேற்றைய தினம், அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மகனுக்கு, நான் தான் உன் தந்தையை கொன்றேன் என தெரிவித்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறப்படுகின்றது. 

வெளிநாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கரந்தெனிய சுத்தாவின் மைத்துனர் நேற்று (04) சுட்டுக் கொல்லப்பட்டதாக விசாரணைக் குழுக்கள் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொலைபேசி அழைப்பு

கடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்பு மீட்டியாகொட பகுதியில் மகதும நளின் என்ற கொல்லப்பட்டுள்ளார். அந்த நபரின் மகன் இசுரு என்பவர் வெளிநாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று அம்பலாங்கொடையில் குறித்த தொழிலதிபர் கொல்லப்பட்ட பிறகு, அவரின் மகனுக்கு இசுரு தொலைபேசி அழைப்பு விடுத்து, “நான் தான் உன் தந்தையைக் கொன்றேன். என் தந்தையின் மரணத்திற்கு நான் பழிவாங்கிவிட்டேன்” என்று கூறியதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று, அம்பலாங்கொடை நகராட்சி மன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலதிபரான வர்ஷவிதான மிரந்த என்பவரை காரில் வந்த ஒரு குழு குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.

இதனை தொடர்ந்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version