இந்த வார விசாரணை நாளில் சாண்ட்ரா செய்த சீக்ரெட் டாஸ்க் முக்கியமான டாப்பிக்காக இருக்கலாம்.

‘வாட் எ மெடிக்கல் மிராக்கிள்?!’ என்பது மாதிரி பாருவிற்கு best performer அங்கீகாரம் கிடைத்தது ஆச்சரியம்.

அப்படியாவது அவர் திருந்துவார் என்று சக போட்டியாளர்கள் நினைத்து வாக்களித்தார்களா, அல்லது உண்மையிலேயே பாருவிற்கு இன்னொரு பாசிட்டிவ் பக்கம் இருக்கிறதா, அல்லது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பாரு அடக்கி வாசித்தாரா, அல்லது கேப்டன் ஆன பிறகு பாருவைக் கவனித்துக் கொள்ளலாம் என்கிற உள்குத்து காரணமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்கக வேண்டும்.

இது எங்க பல்லேலக்கா’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. விருந்தினர்கள் கிளம்ப வேண்டிய நேரம் “நீங்க இங்க ரீல்ஸ் போட வரலை” என்று திவாகருக்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தார் தீபக். யார், எத்தனை முறை சொன்னால் என்ன? அவர்கள் போன மறுநிமிடமே நெஞ்சில் குத்திக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளும் அபத்தத்தை திவாகர் நிறுத்தப் போவதில்லை.

“வினோத் சொல்றதையெல்லாம் நீங்க கிண்டலா எடுத்துட்டு கோபப்பட தேவையில்லை. ரெண்டு பேர் காம்போ நல்லாயிருக்கு. செந்தில் – கவுண்டமணி மாதிரி” என்று தீபக் சொல்ல, “யாரு.. செந்தில்.. யாரு கவுண்டமணின்னு அப்ப கூட சண்டை வந்துடும்” என்று விக்ரம் சொன்னது அல்டிமேட்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 33

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 33 | 07/11/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 32

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 32 | 06/11/2025

Share.
Leave A Reply

Exit mobile version