இந்த விவகாரம் குறித்து பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் (பி.ஐ.ஏ.எல்) கருத்து தெரிவிக்க மறுத்தாலும், விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல் உள்ள கேட் 3 அருகே இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.

பெங்களூரு விமான நிலையத்தின் டெர்மினல் 2-ன் நுழைவாயிலுக்கு வெளியே ஒரு குழுவினர் தொழுகை செய்வதைக் காணலாம். அருகில் மத்திய தொழிற் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர்கள் நிற்கிறார்கள். Photograph: (Express Photo)

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (கே.ஐ.ஏ) ஒரு குழுவினர் தொழுகை செய்யும் வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலானதை அடுத்து, கர்நாடக அரசின் பொறுப்புணர்வை பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) ஞாயிற்றுக்கிழமை கேள்வி எழுப்பியது.

 

அந்த வீடியோவில், விமான நிலையத்தின் டெர்மினல் 2-ன் நுழைவாயிலுக்கு வெளியே ஒரு குழுவினர் தொழுகை செய்வதைக் காணலாம். அருகில் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு குழுவினர் நிற்கின்றனர்.

பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் (பி.ஐ.ஏ.எல்) இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்தாலும், விமான நிலையத்தின் டெர்மினல் 2-இல் உள்ள கேட் 3 அருகே இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பா.ஜ.க-வின் கர்நாடகப் பிரிவு செய்தித் தொடர்பாளர் விஜய் பிரசாத், முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோரைக் குறிப்பிட்டு, தொழுகை செய்தவர்கள் முன் அனுமதி பெற்றார்களா என்று மாநில அரசிடம் கேள்வி எழுப்பினார்.
Advertisements

“பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் டி2 (T2) டெர்மினலுக்கு உள்ளே இது எப்படி அனுமதிக்கப்பட்டது? முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர் பிரியங்க் கார்கே நீங்கள் இதை அங்கீகரிக்கிறீர்களா? இந்தக் குழுவினர் உயர் பாதுகாப்பு விமான நிலையப் பகுதியில் தொழுகை செய்ய முன் அனுமதி பெற்றார்களா?” என்று பிரசாத் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி பெற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பாத சஞ்சலனம் (ஊர்வலம்) நடத்தும்போது, அரசு அதை எதிர்க்கிறது.

ஆனால், ஒரு தடைசெய்யப்பட்ட பொதுப் பகுதியில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏன் கண்டும் காணாமல் இருக்கிறது? இது போன்ற ஒரு முக்கியமான மண்டலத்தில் இது ஒரு கடுமையான பாதுகாப்புக் கவலையை ஏற்படுத்தாதா?” என்றும் பிரசாத் கேள்வி எழுப்பினார்.

விமான நிலைய டெர்மினலுக்குள் தொழுகை அறை இருப்பதாகவும், ஆனால் இந்தக் குழுவினர் விமான நிலைய கேட் வெளியே தொழுகை செய்ததாகவும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் உள்ள ஒரு அதிகாரி, விமான நிலையம் தங்கள் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாகத் தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும் கூறினார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version