பிரித்தானிய பிரதமர் பதவியில் கெய்ர் ஸ்டார்மர் நீடிக்கலாமா என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மக்கள் அளித்துள்ள பதில் அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

பிரதமர் பதவியில் ஸ்டார்மர் நீடிக்கலாமா?

பிரதமர் பதவியில் ஸ்டார்மர் நீடிக்கலாமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, வெறும் 27 சதவிகிதம் பேர் மட்டுமே, நீடிக்கலாம் என பதிலளித்துள்ளார்கள்.

51 சதவிகிதம் பேர், ஸ்டார்மர் பதவி விலகவேண்டும், அவருக்கு பதிலாக வேறொருவர் அந்த பொறுப்பை ஏற்கவேண்டும் என கூறியுள்ளார்கள்.

23 சதவிகிதம் பேர், தங்களால் எந்த முடிவையும் எடுக்கமுடியவில்லை என்று கூறியுள்ளார்கள். 

கன்சர்வேட்டில் கட்சிக்கு மக்களிடையே எதிர்ப்பு உருவாகி, அந்த எதிர்ப்பு லிபரல் கட்சிக்கு வாக்குகளாக மாற, கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானிய பிரதமர் ஆனார்.

ஆனால், புலம்பெயர்தல் முதலான பல்வேறு பிரச்சினைகளை அவர் சரியாக கட்டுப்படுத்தவில்லை என்னும் எண்ணம் மக்களுக்கு உருவாகியுள்ளது.

அத்துடன், ஸ்டார்மர் கட்சியிலுள்ள அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்களே அவருக்கு எதிராகத் திரும்பி வருகிறார்கள்.

இதற்கிடையில், பிரதமரின் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக நேற்று வெளியான தகவலால் பரபரப்பு உருவானது நினைவிருக்கலாம்.

ஆக, பிரித்தானியாவில் ஸ்டார்மருக்கு ஆதரவு குறைந்துவருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version