“உங்களுக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள்” என சிரியா ஜனாதிபதி அகமது அல்ஷராவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டது, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
சிரியா ஜனாதிபதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, சிரியா ஜனாதிபதிக்கு வாசனைத் திரவியமொன்றை ட்ரம்ப் பரிசாக வழங்கியுள்ளார்.
அவ்வேளை, “இது ஆண்களுக்கான வாசனைத் திரவியம்” என்று ட்ரம்ப கூறிவிட்டு, அந்த வாசனைத் திரவியத்தை சிரியா ஜனாதிபதி மீது தெளித்திருக்கிறார்.
“இது மிகச் சிறந்த வாசனைத் திரவியம்” என்றும் “மற்ற வாசனைத் திரவியங்கள் உங்கள் மனைவிக்கானது. உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என்று ட்ரம்ப், கேட்க, அதற்கு சிரியா ஜனாதிபதி, “ஒன்றே ஒன்றுதான்” என்று பதிலளித்துள்ளார்.
அப்போது சுற்றியிருந்த தலைவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்துள்ளது.
அத்துடன், இந்த சந்திப்பின்போது அகமது அல்ஷராவும் ட்ரம்புக்கு பல அடையாளப் பரிசுகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பண்டைய சிரிய நாட்டுக் கலைப்பொருட்களின் பிரதிகள், குறிப்பாக, அந்நாட்டின் முதல் எழுத்துக்கள், முதல் முத்திரை, முதல் இசைக் குறிப்பு, முதல் சுங்க வரி போன்றவற்றின் குறிப்புப் பிரதிகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

