ராஜா ராணி டாஸ்க். இரண்டு ராஜாக்களையும் பதவியிலிருந்து தூக்க முடிவு செய்தார் பிக் பாஸ். பாரு -கம்ரு இடையிலான கூட்டணி மீண்டும் உடையும் சந்தர்ப்பம் வந்தது.
ராஜா – ராணி டாஸ்க் இரண்டாவது நாளிலும் சொதப்பல்தான். திவாகரை பங்கம் செய்து வினோத் சொல்லும் கமெண்ட்டுகள் மட்டுமே சற்றாவது கலகலப்பை ஏற்படுத்துகின்றன.
‘பொன்னிநதி பார்க்கணுமே’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. இரண்டு போ் இருக்கிற வீட்டிலேயே பாத்ரூமிற்கு காலையில் சண்டை ஏற்படும்.
இத்தனை போ் இருக்கிற வீட்டில் சண்டை ஏற்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம். சண்டை ஏற்படுவதற்குத்தானே பிக் பாஸ் இரண்டே பாத்ரூம்களை கட்டி வைத்திருக்கிறார்?!
“இன்னிக்கு டாஸ்க்கிற்கு என்ன பிளான் செஞ்சு வெச்சிருக்கிறே?” என்று திவாகரை நோண்டத் துவங்கினார் வினோத். பின்குறிப்பாக “நீ என்ன செய்யப் போறே..
ஏற்கெனவே மூணு தோசை உள்ளே போயிடுச்சு.. அடுத்து என்ன சாப்பிடலாம்ன்னுதான் யோசிப்பே” என்று வினோத் கிண்டலடிக்க, திவாகருக்கு கோபம் வந்து “நீ வடசட்டியை நக்கித் தின்றவன்தானே?” என்று பதில் தாக்குதலைத் துவங்க, இரு தேசத்து ராஜாகளுக்கும் இடையில் தீனிப்பண்டார போர் துவங்கியது.
Advertisement
பாரு சமையில் டீமிற்குள் வந்தது எஃப்ஜேவிற்கு பிடிக்கவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. தோசைக்கு குழம்பு போதாத நிலையில், தனக்கு தரப்பட்ட குழம்பை பாரு வீணாக்கியதால் எஃப்ஜேவிற்கு கோபம்.
தோசையைத் தூக்கி குப்பையில் எறிந்தார். “அதை வேஸ்ட் பண்ணாம மத்தவங்களுக்கு தந்திருக்கலாமே?” என்று கனியும் கூடவே பின் பாட்டு பாடினார்.
‘உணவு வேஸட்’ என்றதும் பாருவிற்கு விசாரணை நாள் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். “ஓகே.. பாடம் கத்துக்கிட்டேன்” என்று மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார். பாரு மன்னிப்பு கேட்பது உலகத் தொலைக்காட்சிகளில் இதுவே முதன்முறையாக இருக்கலாம்.
புதிய அரசியாக பாரு – புதிய அரசனாக விக்கல்ராயன்
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 38
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 38| 12/11/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 37
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 37| 11/11/2025

