நாகரிகம் கருதி கோபம், வன்மம், குதர்க்கம் போன்றவற்றை உள்ளே ஒளித்து வைத்துக் கொள்வதால்தான், வன்முறையின் சதவீதம் குறைந்து உலகம் ஓரளவிற்காவது இயங்குகிறது.
உணவு, காமம், சுதந்திரம் போன்ற சில ஆதாரமான விஷயங்களைப் பிடுங்கிக் கொண்டு ஒரு மனிதக் குழுவை அடைத்து வைத்தால் அவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்?
அவர்களுக்குள் உறைந்திருக்கும் காட்டுமிராண்டித்தனங்கள் மெல்ல மெல்ல வெளியே வருமா? அல்லது நாகரிக பரிணாம வளர்ச்சியின்படி சகிப்புத்தன்மையோடு இயங்குவார்களா?
இதுவே பிக் பாஸ் விளையாட்டின் அடிப்படை பரிசோதனையாக இருக்கிறது. இந்த ஷோ வணிக வடிவமாக இருந்தாலும் கூட இதில் நமக்கான சமூகப் பாடங்களும் இருக்கின்றன.
குப்பைக்கூடையில் சபரி சில விஷயங்களைக் கண்டெடுத்திருக்கிறார். ‘வேற ஒரு மேட்டரும் இருக்கு. யார் பண்ணுதுன்னு தெரியாம வெளில சொல்லக்கூடாது…. தப்பா போயிடும்” என்று சூசகமாக சொல்கிறார். “அடிச்சுக்கூட கேப்பாங்க வெளில சொல்லிடாதீங்க’ என்று வினோத் மற்றும் கம்ருதீனிடம் சொல்கிறார்.
சபரி சொன்ன போது மண்டையை பலமாக ஆட்டிய கம்ரூதீன், அன்று இரவே சாண்ட்ராவிடம் இதைப் பற்றி சொல்லி குப்பை கவரையும் மெனக்கிட்டு தூக்கி வந்து காட்டுகிறார். வீக்கெண்ட் ஷோவில் சீன் போடுவதற்காக சபரி எதையோ பிளான் செய்வதாக இவர்கள் நினைக்கிறார்கள். சபரி உண்மையிலேயே அந்த நோக்கத்தில்தான் செயல்படுகிறாரா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும்.
“எல்லாத்தையும் சரியா யோசிப்பா.. ஆனா செயல்படுத்த மாட்டா. ரேங்கிங் டாஸ்க்ல அவளுக்கு ரெண்டாவது இடம் ரொம்பவே ஓவர்” – சுபிக்ஷா தனது தோழியாக இருந்தாலும், ரேங்கிங் டாஸ்க்கில் வியானா வெளிப்படையாக சொன்ன அபிப்ராயம் இது.
.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 40
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 40| 14/11/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 39

