மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து சேர்ந்தன.

இந்தச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் அங்கு சென்று பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின்கள் விளையாடியதை அவதானிக்க முடிந்தது.

மன்னார் மாவட்டத்தில் கரையோரப் பகுதிக்கு இந்த டொல்பின் மீன் இனம் கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நேரம் இலுப்பைக்கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாகச் சுற்றித் திரிந்த குறித்த டொல்பின் மீன்கள் தமது இருப்பிடம் நோக்கிச் செல்ல சில மீனவர்கள் உதவி செய்தனர்.

இந்த நிலையில் குறித்த டொல்பின் மீன்கள் மீண்டும் கூட்டமாக தமது இருப்பிடத்தை நோக்கிச் சென்றன.

இந்த அரிய காட்சியை மீனவர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version