போட்டியாளர்கள் சண்டைபோடும் படியான சூழலை ஏற்படுத்தி, ‘வீக்கெண்ட் வரட்டும்… எங்காளு கேள்வி கேட்பாரு’ என்கிற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் பிக் பாஸின் தந்திரம்.

இந்த எபிசோடு நன்றாக சமைக்கப்பட்ட ஒன்று. எனவே தீயாக இருந்தது. ஆனால் முழுக்கவும் நியாயமாக இருந்ததா?

வில்லன் பாத்திரம் வலுவாக அமைக்கப்படுவது கமர்ஷியல் திரைப்படங்களின் வெற்றிக்கான ஆதாரமான ஃபார்முலா. அதுபோல இந்த சீசனின் பெரும் கலகவாதியான பாருவை இழக்கவிரும்பாமல் அவரைக் காப்பாற்றி தக்க வைத்துக்கொள்ள பிக் பாஸ் டிராமா ஆடுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

இந்த எபிசோடை இரண்டு பிரிவுகளாக பார்க்கலாம், ஒன்று, பாரு மற்றும் திவாகரை டிசைன் டிசைனாக விசே ரோஸ்ட் செய்தது.

அப்பாவி எம்ஜிஆரை நம்பியார் அடித்து துவைக்கும்போது ‘அய்யோ… பாவம்… இந்த வில்லனை கேள்வி கேட்க ஆளே இல்லையா?” என்று பார்வையாளர்கள் மனம் பதைப்பார்கள்.

பிறகு இன்னொரு வீர எம்ஜிஆர் வந்து வில்லனை ‘நான் ஆணையிட்டால்’ என்று சவுக்கால் அடிக்கும்போது ‘அப்படிப் போடு’ என்று குதூகலிப்பார்கள். இப்படியாக எழுப்பப்படும் பரவசம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 41

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 41|15/11/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 40

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 40| 14/11/2025

 

Share.
Leave A Reply

Exit mobile version