இலங்கையில் இது வரை பாவனையில அற்ற சுமார் 6 அங்குல நீளமுள்ள புதிய ரக துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நீர்கொழும்பு குரண பகுதியில், பாதுகாப்புப் படையினரிடம் இல்லாத, உள்ளங்கையில் மறைத்து வைக்கக்கூடிய சிறிய துப்பாக்கியுடன் ஒரு தொழிலதிபர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

பெல்ஜியத்தின் தயாரிப்பு

இது பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட பிரவுனிங் வகை பிஸ்டல் துப்பாக்கியாகும். நீர்கொழும்பின் குரண பகுதியில் கார் உதிரி பாகங்களை விற்கும் தொழிலதிபர் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து, சந்தேக நபரின் வீடு சோதனை செய்யப்பட்டு, ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரித்தபோது, ​அவரது இறந்த தந்தையிடமிருந்து இதை அவர் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதுடையவர்.

Share.
Leave A Reply

Exit mobile version