டெல்லி செங்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் பலர் பலியாகிய சம்பவத்துக்குப் பிந்தைய விசாரணைகளில், இந்தியாவில் ஹமாஸ் முறைப் போல ட்ரோன் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து கிடைத்த வாக்குமூலங்களில், ட்ரோன்களை மாற்றியமைத்து ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சி நடைபெற்றதைப் பாதுகாப்பு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தத் தகவல்கள், நாட்டின் பாதுகாப்பு நிலையை மேலும் கவலைக்கிடமாக்கியுள்ளது. குறித்த பயங்கரவாதக் குழுவின் மற்ற திட்டங்கள் என்ன என்பதற்கும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

