காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு செவ்வாய்க்கிழமை(18) அன்று காலை ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் காலை 6.50 மணியளவில் பயணித்த யாழ் தேவி புகையிரதத்தில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்தார்.

நல்லூர் பகுதியை சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version