அகண்டா 2 பட பிரமோஷனுக்காக விசாகப்பட்டினம் சென்ற நந்தமுரி பாலகிருஷ்ணா, ஏர்போர்ட்டில் ஒரு ரசிகருடன் நடந்த சம்பவத்தால் வைரலாகியுள்ளார். சம்யுக்தா பேசும் போது ஏற்பட்ட அவரது ரியாக்ஷனும் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா 2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது பல்வேறு இடங்களில் தாறுமாறாக நடைபெற்று வருகின்றன.

 ஹீரோயின் பேச்சுக்கு பாலைய்யா ரியாக்ஷன் – வைரல் வீடியோ

ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில், படத்தின் ஹீரோயின் சம்யுக்தா பேசும் போது, பாலைய்யா கொடுத்த முகபாவனை இணையத்தில் பரவி வைரலாகியது.
அதில், பிரபலமான ஓரிஜினல் டயலாக்:

👉 “பாசத்துக்கு முன்னாடி பனி… பகைக்கு முன்னாடி புலி…”

இந்த ரியாக்ஷனுடன் ஒத்த மொமென்ட் என்பதால் ரசிகர்கள் மீம்களாக மாற்றி பகிர்ந்தனர்.

 ஏர்போர்ட்டில் பாலைய்யா கோபம் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி

அதனைத் தொடர்ந்து, அகண்டா 2 பிரமோஷனுக்காக விசாகப்பட்டினம் சென்ற பாலைய்யா, விமான நிலையத்தில் ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியாக கையசித்து, ஆட்டோகிராஃப் அளித்தார்.

ஆனால் சில நிமிடங்களில், ஒரு ரசிகர் நெருங்கி வர முயன்றபோது பாலைய்யா திடீரென கோபமடைந்து, தன் பாதுகாவலரிடம்:

“அந்த நபரை அருகில் வர விடாதீங்க… என் கண் முன்னாடி வரக்கூடாது!”

என்று கத்தும் வீடியோ வெளியானது.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிலர் பாதுகாப்பு காரணமாக அவர் இப்படிச் செய்தார் என கூற, மற்றொரு பகுதி ரசிகர்கள் இது தேவையற்ற கோபம் என கருத்து தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version