பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு வந்த மாணவன் துஸ்யந்தன் சாத்வீகன், பாடசாலைக்குள் நுழைந்தபோது பாம்பு கடித்த நிலையில் இருந்தும், ராசாயனவியல் பரீட்சையை தவற விடாமல் எழுதினார். குருதிப் பெருக்கு ஏற்பட்டதை கவனித்த பரீட்சை மேற்பார்வையாளர்கள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவசர சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் மருத்துவக் கண்காணிப்புடன் பரீட்சை மண்டபத்துக்குத் திரும்பி பரீட்சையை முடித்துள்ளார். சனிக்கிழமையன்றைய பரீட்சைக்கும் அவர் நோயாளர் காவுவண்டி மூலம் கொண்டு செல்லப்படுவார் என தகவல்.

Share.
Leave A Reply