இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், திருமண பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று இணைந்துக்கொண்டார்.

இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டார்.

திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ உட்பட பல இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

 


 


 



Share.
Leave A Reply

Exit mobile version