பாணந்துறை ஹிரணவில் அமைந்துள்ள மெத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு நிலவியுள்ளது. தீயை கட்டுப்படுத்த மொரட்டுவ தீயணைப்புப் பிரிவிலிருந்து உடனடியாக ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீவிபத்தின் காரணம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

