கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முன் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தொடங்கிய தகராறு, வன்முறையாக மாறி உணவக ஊழியர்கள் ஒரு குழுவினரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

இந்த தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version