இலங்கை மத்திய வங்கியின் பெயரும் இலட்சினையும் தவறாகப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல மோசடி வியாபாரங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, மத்திய வங்கி அவசர தெளிவூட்டலை வெளியிட்டு, இத்தகைய வஞ்சக வியாபாரங்களுக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று உறுதியளித்துள்ளது.

போலி முதலீட்டு திட்டங்கள், வேகமான லாபம் தரும் எனக் கூறப்படும் ஆன்லைன் திட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் எனவும், பணத்தை இழக்கும் அபாயம் மிக அதிகம் எனவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

“எச்சரிக்கையாக இருங்கள்; இத்தகைய மோசடிகளில் வீழ்ந்தால் உங்கள் கடைசி பணத்தையும் இழக்க நேரிடும்” என வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version