“மத்தவனுக்கு ஹெல்ப் பண்ற வேலை உனக்கெதுக்கு.. உன் வெற்றிதான் முக்கியம். மத்தவனை இடிச்சாவது மேல போ” என்பதைத்தான் பெற்றோர்களும் சமூகமும் பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறது.

பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதியின் வழிகாட்டுதல்களையும் தாண்டி திக்கு திசை தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு, வீடியோ கால் மூலம் வந்த நண்பர்களின் அறிவுரை ஒரு புதிய வெளிச்சமாக அமைந்திருக்கும்.

இந்த வெளிச்சம் ஆட்டத்தின் போக்கை மாற்றுமா, அல்லது அதே மாதிரியாகத்தான் இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

காலையிலேயே கிச்சன் ஏரியாவில் ஒரு இனிப்பான சண்டை துவங்கியது. வியானா கேசரி செய்தது, அணுகுண்டு தயாரித்த பிரச்னை மாதிரி ஆகி ஐநா சபை வரை சென்று விடும் போலிருக்கிறது. இதையே ஒரு காரணமாக பிரஜின் கூறி வருகிறார்.

கேசரி பிரச்னையை வைத்தே வியானாவை வம்பிழுக்க முயன்றார் திவ்யா. “சர்க்கரை சுத்தமா இல்ல. இப்ப எதை வெச்சு டீ போடறது. கேசரில்லாம் பண்ணி சர்க்கரையை காலி பண்ணிட்டாங்க” என்று திவ்யா சொல்ல “வாரத்தோட கடைசி நாள் பொருட்களை செலவு செய்யலாம்.

நான் கேசரி செஞ்சும் ஒரு பாக்கெட் மிச்சம் இருந்தது” என்று எரிச்சலுடன் வியானா விளக்கம் அளிக்க “நான் ஒண்ணும் கம்ப்ளெயிண்ட் பண்ணலை. சாதாரணமாத்தான் கேட்டேன்” என்று ரிவர்ஸ் கியர் போட்டார் திவ்யா.

“நான் வேணா தல கிட்ட பேசிக்கிறேன்” என்று வியானா அலட்சியமாக அகன்றதின் காரணம் ‘இப்போ தலயே என் பாக்கெட்லதான்’ என்கிற ரொமான்ஸ் தைரியமோ என்னமோ?!

“அடுத்த முறை நல்ல குக்கிங் டீமா போடுங்க. சாப்பாடு பத்த மாட்டேங்குது. பொருள் இருந்தாலும் செய்ய மாட்றாங்க.. மூணு தோசதான் கொடுக்கறாங்க.” என்று வியானா சொல்ல “அடுத்த முறை யாரு தலயா வந்தாலும் வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க. ஒரு கரண்டி மாவுல நாலு தோசை செய்வாங்க” என்கிற மாதிரி கடுகடுத்தார் திவ்யா.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 49

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 50|24/11/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 49

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 49|23/11/2025

 

Share.
Leave A Reply

Exit mobile version