இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமாத்திரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட மூன்று புயல்களினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல பகுதிகளில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக மக்களை அணுக முடியாமல் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் மற்றும் புயல்கள்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் குடியிருப்புகள் , வீதிகள் , கட்டிடங்கள் என்பன சேதடைந்துள்ளன.

இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் மலேஷியாவிலும் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 1,140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், இந்தியோனேஷியாவில் மட்டும் 631 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், சுமாத்திரா தீவின் பல பகுதிகள் வெள்ள நீர் நிரம்பியதால் மக்களை எளிதில் இன்னும் அணுக இயலாததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளங்கள், மண்சரிவு காரணமாக வீதிகள் சேதடைந்ததால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version