கனடாவின் அலாஸ்கா மற்றும் யூகான் பிராந்தியத்தின் எல்லை அருகிலுள்ள தொலைதூர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவுக்கோலில் 7.0 அளவில் இந்த நிலநடுக்கம் நடந்துள்ளதாக அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வுமையமான USGS தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை எதும் வெளியிடப்படவில்லை என்றும், உடனடி சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நிலநடுக்க மையம்

USGS தெரிவித்த தகவலின்படி:

  • இந்த நிலநடுக்கம் அலாஸ்காவின் ஜூனோவிலிருந்து 230 மைல்கள் (370 கி.மீ.) வடமேற்கில்

  • மற்றும் யூகானின் வைட்ஹார்ஸிலிருந்து 155 மைல்கள் (250 கி.மீ.) மேற்கில் ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு நிலை

கனடாவின் இயற்கை வளங்கள் துறையின் நில அதிர்வு நிபுணர் ஆலிசன் பட் தெரிவித்துள்ளார்:

“யூகானில் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி பெரும்பாலும் மலைப்பாங்கானதும், மக்கள் குறைவாக வசிக்கும் இடமுமாகும். கட்டிடங்களில் பெரிய அளவு கட்டமைப்பு சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.”

அதனால் இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தாலும் மக்கள் வாழும் பகுதிகளில் தாக்கம் குறைவாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version