அநுர அரசாங்கத்தின் கீழ் சட்டவிரோதமாக பெற்ற சொத்துக்கள் மற்றும் உடமைகள் அரச சொத்தாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்கும் திட்டம்

  • நாட்டில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் அரசிடமிருந்து பறிமுதல் செய்யப்படவும், அரச சொத்தாக மாற்றப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  • கடந்த இரண்டு வருடங்களில் பின்வரும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படவுள்ளன:

    • 354 பவுன் தங்கம்

    • 77 வாகனங்கள்

    • 35 கோடி ரூபா பணம்

    • 1 கோடி 6 இலட்சம் ரூபா பெறுமதியான பிற சொத்துகள்

2024ஆம் ஆண்டின் நிலை

  • 150 பவுன் தங்கம்

  • 64 வாகனங்கள்

  • 6 கோடி ரூபா பணம்

  • 61 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள்

இவை தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டு, அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டின் நிலை (இதுவரை)

  • 204 பவுன் தங்கம்

  • 13 வாகனங்கள்

  • 67 கோடி 78 இலட்சம் ரூபா பெறுமதியான காணி மற்றும் பிற சொத்துக்கள்

  • 18 வீடுகள்

இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்களை அரசுடமையாக்கும் முயற்சியின் ஒரு பகுதி எனவும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply