தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்கள் மற்றும் 4 யுவதிகளை கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது ஐஸ், ஹேஸ், குஷ், கொக்கேய்ன், மஷ்ரூம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Share.
Leave A Reply