மத்துகம, வோகன்வத்த பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக 41 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (டிசம்பர் 16) இரவு 11.40 மணியளவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலையைச் செய்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், மத்துகம பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இக்கொலைச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த சுமார் 50 பேர் கொண்ட கும்பல், இன்று (டிசம்பர் 17) காலை சந்தேகநபரின் வீட்டிற்குச் சென்று தீ வைத்து எரித்து நாசமாக்கியுள்ளது. கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் தொடாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இந்தப் பதற்றமான சூழலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version