இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடனையடுத்து, மலையகத்தின் பல பகுதிகளில் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 17 ஆம் திகதி, கலுந்தேவல பகுதியில் உள்ள சில வீடுகளில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நிலந்த பிரேமகுமாரின் வீட்டின் தரையில் இரவு 8.30 மணியளவில், தனது பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தபோது டைல்கள் வெடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். வீட்டின் சுவர்கள் பல இடங்களில் விரிசலாகி, அருகிலுள்ள வீடுகளின் சுவர்களிலும் விரிசல்கள் உருவாகியுள்ளன. அப்பகுதியில் உள்ள கழிப்பறைகள் கூட தாழிறங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிராம அலுவலருக்கு தகவல் கொடுத்த பிறகு, சம்பவத்தின் புகைப்படங்களை கிராம மக்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, விரைவான விசாரணை நடத்தி, நிலவரத்தை தெளிவுபடுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலையகத்தின் பல பகுதிகளில் வீடுகளில் வெடிப்பு, வீதிகளில் விரிசல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஏற்படுவதாகவும், கடந்த கால டித்வா புயலின் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் தற்போது நிலையான அச்சுறுத்தலோடு பாதுகாப்பான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

