தையிட்டி பகுதியில் தனியார் காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் விகாரையை “சட்டவிரோத கட்டிடம்” என அடையாளப்படுத்த பிரதேச சபை எடுத்த முயற்சிக்கு பொலிஸார் முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

  • பிரதேச சபை தீர்மானம்: வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ ரஜமகா விகாரை, முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதால் அதனை “சட்டவிரோத கட்டிடம்” என மூன்று மொழிகளிலும் பெயர்பலகை வைப்பதாக சபை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.

  • பொலிஸாரின் எச்சரிக்கை: இது குறித்து பிரதேச சபை செயலாளருக்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில், இத்தகைய பெயர்பலகையை வைப்பது பௌத்த மற்றும் இந்து சமயங்களுக்கு இடையிலான நல்லிணத்தைப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • சட்ட நடவடிக்கை: சட்டரீதியற்ற முறையில் இவ்வாறான பெயர்பலகைகளை சபையினாலோ அல்லது வேறு அமைப்புகளினாலோ நாட்டினால், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

  • தவிசாளர் வெளியீடு: நேற்று நடைபெற்ற விசேட சபை அமர்வின் போது, தவிசாளர் சோ.சுகிர்தன் பொலிஸாரால் அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தை சபையில் பகிரங்கப்படுத்தினார்.

சட்டப்பூர்வமான அதிகாரம் கொண்ட உள்ளூர் ஆட்சி மன்றத்தின் தீர்மானத்தை, மத நல்லிணக்கம் என்ற அடிப்படையில் பொலிஸார் தடுத்துள்ளமை தற்போது வடக்கில் பேசுபொருளாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version