மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுவாஞ்சிகுடி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் களுதாவளை மத்தியப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version