டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது தொடர்பாக ஐசிசி-க்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருந்தது.

மறுபுறம், புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்தது.எனவே பாகிஸ்தான் தனது முடிவில் இருந்து பின் வாங்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே நேற்று ஐசிசி குழு பாகிஸ்தான் கிரிகெட் போர்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.தொடர்ந்து பாகிஸ்தான் கிரிகெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து தனது முடிவை மாற்றிய பாகிஸ்தான் அரசு, டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியில் விளையாட தங்கள் கிரிக்கெட் அணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைகளை ஏற்று, கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி இந்தப் போட்டியில் பங்கேற்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் வரும் 15 ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version