ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தை பகுதியில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாகம்மன சமகி மாவத்தை பகுதியைச் சேர்ந்த சிறுமியே கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று, சிறுமியின் தாயின் காதலன், சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ள நிலையில் சுகயீனமுற்ற சிறுமி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் தாயின் காதலன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சிறுமியின் தாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தேகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version