இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேல் நாடாளுமன்றத்தை சென்றடைந்தார். பிரதமர் மோதி உரையாற்றுவதற்கு முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை “சிறந்த இந்தியத் தலைவர்” என்று நெதன்யாகு வர்ணித்தார்.
பிரதமர் மோதியின் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நிறைய மேம்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
“நீங்கள் ஒரு நண்பர் மட்டுமல்ல, ஒரு சகோதரர் என்று நான் கூற விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
பிரதமர் மோதி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு வந்தபோது அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. “மோதி, மோதி” என்ற முழக்கங்கள் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தன.
பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விமான நிலையத்திற்கு வந்து மோதியை வரவேற்றார்.
இஸ்ரேலை அடைந்த பிறகு பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில் , “நான் இஸ்ரேலை அடைந்துவிட்டேன்.
பிரதமர் நெதன்யாகுவும் திருமதி நெதன்யாகுவும் விமான நிலையத்தில் என்னை வரவேற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்தியா-இஸ்ரேல் நட்பை மேலும் வலுப்படுத்தும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் நேர்மறையான முடிவுகளை எதிர்நோக்குகிறேன்.” என பதிவிட்டிருந்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோதியை வரவேற்ற பிறகு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இன்று, என் மனைவி சாராவுடன், எனது நல்ல நண்பரும் இந்தியப் பிரதமருமான நரேந்திர மோதியை வரவேற்றேன், அவர் இஸ்ரேலுக்கு மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக வந்துள்ளார்” என்று பதிவிட்டிருந்தார்.
“எங்களுக்கு இடையே ஆழமான நட்பு உள்ளது, நாங்கள் அடிக்கடி பேசுகிறோம். எங்களின் இந்த நட்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
Big round of applause and standing ovation for Indian Prime Minister @narendramodi at the Israeli Parliament – The Knesset. pic.twitter.com/2vw7DEg05H
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) February 25, 2026
Deeply touched by the warm welcome extended by my friend, PM Netanyahu. May the India-Israel friendship continue to soar higher! 🇮🇳 🇮🇱@netanyahu pic.twitter.com/zl6Flj9wpz
— Narendra Modi (@narendramodi) February 25, 2026

