மெக்சிகோவின் மிகவும் தேடப்பட்டு வந்த நிலையில் மரணமான போதைப்பொருள் கடத்தல் மன்னனான நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் அல்லது “எல் மென்ச்சோ”சின் உடல் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு தங்கப் பேழையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
59வயதான எல் மென்ச்சோ இமெக்சிகோவின் மிகவும் சக்திவாய்ந்த ‘nஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ என்ற அமைப்பின் தலைவராவார்.
கடந்த பெப்ரவரி 22இ 2026 அன்றுஇ nஜாலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா பகுதியில் மெக்சிகோ சிறப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துஇ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

வாகனங்களுக்குத் தீ வைப்பு மற்றும் சாலை மறியல் போன்ற சம்பவங்களில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் அவரது உடல் ஒரு பளபளப்பான தங்க நிறப் பேழையில் வைக்கப்பட்டுஇ மெக்சிகோவின் பாரம்பரிய ‘பாண்டா’ இசையுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
இவற்றை எடுத்துச் செல்ல மட்டும் 5 பாரவூர்திகள் தேவைப்பட்டன.
இதேவேளை, இறுதிச் சடங்கின் போது மீண்டும் வன்முறை வெடிக்காமல் இருக்கஇ தேசியக் காவல்படை மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.