மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் ஈரான் – அமெரிக்கப் போர் நடவடிக்கைகளுக்காகத் தனது வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க இராணுவ விமானங்கள் விடுத்த கோரிக்கைகளைச் சுவிட்சர்லாந்து அரசாங்கம் நிராகரித்துள்ளது.

தனது நாட்டின் பாரம்பரிய ‘நடுநிலைமைச் சட்டத்தை’ சுட்டிக்காட்டி சுவிஸ் அரசாங்கம் சனிக்கிழமை இந்த அதிரடி தீர்மானத்தை அறிவித்தது.

அமெரிக்க இராணுவ மற்றும் உத்தியோகபூர்வ விமானங்கள் சுவிஸ் வான்பரப்பைக் கடக்க விடுத்த 05 கோரிக்கைகளை ஆராய்ந்த அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளது.

போருடன் நேரடியாகத் தொடர்புடைய இராணுவ நோக்கங்களுக்காகச் செல்லவிருந்த இரண்டு விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகவும், போருடன் தொடர்பில்லாத பராமரிப்புப் பணிகளுக்காகவும் செல்லவிருந்த மூன்று விமானங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply