கொழும்பு செல்லும் நண்பனைப் பேருந்தில் அனுப்பி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலக உத்தியோகத்தருக்கு விபத்தில் உயிரிழந்துள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுப் புதன்கிழமை (18) இரவு-11.30 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு வீதியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இளம் குடும்பஸ்தரின் மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து வீதியிலிருந்து விலகி வீதியோரம் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

நண்பரொருவரைக் கொழும்பு பேரூந்தில் அனுப்பி விட்டுத் தனது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வருகிறது.

விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

 

Share.
Leave A Reply

Exit mobile version