இரான் மீதான போர் குறித்து நேற்று (மார்ச் 19) உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “எவ்வளவு காலம் தேவையோ அதுவரை போர் நடக்கும், நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்தப் போரில் வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் ஆயுதக் கிடங்கு, ஏவுகணை ஏவுதளங்கள், மற்றும் ஏவுகணை பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்ற அணுசக்தி உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட, இரானில் இஸ்ரேலிய ராணுவம் அழித்து வரும் அனைத்து விஷயங்களையும் நெதன்யாகு பட்டியலிட்டார்.

“இரானியத் தொழில்துறையை இதற்கு முன்பு நாம் தாக்காத வகையில் அழித்து வருகிறோம், ஆனால் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன, அதை நாம் செய்யப்போகிறோம்” என்றும் அவர் கூறினார்.

“இஸ்ரேல் தான் அமெரிக்காவை இரானுடனான மோதலுக்குள் இழுத்துச் சென்றது என்ற ‘போலிச் செய்தியை’ தான் அகற்ற விரும்புவதாக” நெதன்யாகு கூறினார்.

“அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவரிடம் போய் சொல்ல முடியும் என்று உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறீர்களா? அதற்கு வாய்ப்பே இல்லை,” என்று அவர் கூறினார்.

“டிரம்ப் எப்போதும் அமெரிக்காவிற்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் எது நல்லது என்று அவர் நினைக்கிறாரோ அதன் அடிப்படையிலேயே தனது முடிவுகளை எடுக்கிறார்” என்றும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version